இன்று அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும் பொது விடுமுறை! இன்று புதுச்சேரி முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும் பொது விடுமுறையை அறிவித்துள்ளது. இன்றைய தினம் ஆகஸ்ட் 16ம் தேதி, சட்டபூர்வ பரிமாற்ற தினமாக புதுச்சேரியில் கடைப்பிடிக்கப்படுகிறது. நேற்று நமது நாட்டின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியேற்றி உரையாற்றினார். டெல்லியில் பிரதமர் சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியேற்றுவது இது 9-வது முறையாகும்.. பொதுவாக பிரதமர் மோடி உள்நாடு, வெளிநாடு என எங்கு உரை நிகழ்த்தினாலும் டெலி ப்ராம்ப்டர் மூலம் உரை நிகழ்த்துவது வழக்கம். டெலி ப்ராம்ப்டர் இல்லாமல் அவரால் உரை நிகழ்த்த முடியுமா என்று காங்கிரஸ் பலமுறை விமர்சனம் செய்ததும...