Posts

Showing posts with the label #A | #Reg | #Micro | #A

வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு - இல்லத்தரசிகள் அதிர்ச்சி724430670

Image
வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு - இல்லத்தரசிகள் அதிர்ச்சி சென்னை: சமையல் கியாஸ் மற்றும் பயன்பாடு கியாஸ் சிலிண்டர் விலையை மத்திய எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் கியாஸ் கிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து அறிவிக்கின்றன. இந்நிலையில், இந்த மாதத்திற்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்ந்துள்ளது. இதன்மூலம் சென்னையில் கியாஸ் சிலிண்டர் விலை 1068.50 ரூபாயாக உள்ளது. சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது இல்லத்தரசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.