Posts

Showing posts with the label # | #Varavane | #Dhanush | #Pleasant

\'நானே வருவேன்\' - தனுஷ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தாணு1986673051

Image
\'நானே வருவேன்\' - தனுஷ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தாணு Sorry, Readability was unable to parse this page for content. செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன்  பட சிறப்பு போஸ்டரை தயாரிப்பாளர் தாணு வெளியிட்டுள்ளார்.  மயக்கம் என்ன படத்துக்கு பிறகு செல்வராகவன் - தனுஷ் கூட்டணி இணைந்துள்ள படம் நானே வருவேன். இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். வி கிரியேஷன்ஸ் சார்பாக தாணு இந்தப் படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்தில் இயக்குநர் செல்வராகவனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் இந்துஜா, எல்லி ஏவிஆர்ராம், பிரபு, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.  ஓம் பிரகாஷ் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நாளை தனுஷின் பிறந்தநாள் என்பதால் இந்தப் படத்திலிருந்து சிறப்பு போஸ்டரை தயாரிப்பாளர் தாணு வெளியிட்டுள்ளார். முன் அறிவிப்பின்றி வெளியான இந்தப் போஸ்டர் தனுஷ் ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.