கதிஜாவா? கண்மணியா? காத்துவாக்குல ரெண்டு காதல் ரிவியூ! விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா நடித்த காத்துவாக்குல இரண்டு காதல் திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகி உள்ளது. விக்னேஷ் சிவன் இதற்குமுன் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவை வைத்து நானும் ரவுடிதான் என்ற படத்தை இயக்கி இருந்தார். அந்த படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது, அதனை தொடர்ந்து இந்த காம்போ மீண்டும் இணைய போகிறது என்ற தகவல் வந்ததிலிருந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. மேலும் இந்த படத்தில் சமந்தா இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாய் ஏறி இருந்தது. இந்த படத்தில் இருந்து வெளியான பாடல்கள், புகைப்படங்கள் என அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. விஜய் சேதுபதியின் குடும்பத்தில் யாரேனும் பொண்ணு கொடுத்தாலும், எடுத்தாலும் அந்த குடும்பத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடைபெறுகிறது என்று ஊரில் யாரும் பொண்ணு தராமலும் எடுக்காமலும் இருந்து வருகின்றனர். இந்த தடைகளை மீறி விஜய் சேதுபதி அப்பா திருமணம் செய்து கொள்கிறார், ஆனால் விஜய் சேதுபதி பிறந்தவுடன் அவரும் இறந்து விட...