Posts

Showing posts with the label #Ukrainian | #Students | #Cannot | #Indian

உக்ரைன் மாணவர்கள் இந்திய கல்லூரிகளில் சேர முடியாது! விதிகளில் இடமில்லை - மத்திய அரசு பதிலால் ஷாக்! 1939500339

Image
உக்ரைன் மாணவர்கள் இந்திய கல்லூரிகளில் சேர முடியாது! விதிகளில் இடமில்லை - மத்திய அரசு பதிலால் ஷாக்! டெல்லி : உக்ரைனில் இருந்து போர் காரணமாக நாடு திரும்பிய மாணவர்கள் இந்திய கல்லூரிகளில் படிப்பைத் தொடர முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. உக்ரைனில் கல்வி கற்று வந்த இந்திய மாணவர்கள் அங்கு போர் மூண்டதன் காரணமாக படிக்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டனர். அவர்கள் பெரும் முயற்சிகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். உக்ரைனில் பயிலும் இந்திய மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை இந்திய கல்வி நிறுவனங்களில் சேர்த்துக்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது.   உக்ரைன் மாணவர்கள் இந்தியாவில் இருந்து 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் உக்ரைன் நாட்டில் தங்கியிருந்து படித்து வந்தார்கள். உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக அந்த மாணவர்கள் இந்தியா திரும்பினர். போர் காரணமாக நாடு திரும்பிய மாணவர்களுக்கு இந்தியாவில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் படிப்பைத் தொடர அனுமதிக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.   நாடு திரும்பிய மாணவர்கள் கொரோனா தொற்று காரணமாக...