உக்ரைன் மாணவர்கள் இந்திய கல்லூரிகளில் சேர முடியாது! விதிகளில் இடமில்லை - மத்திய அரசு பதிலால் ஷாக்! 1939500339


உக்ரைன் மாணவர்கள் இந்திய கல்லூரிகளில் சேர முடியாது! விதிகளில் இடமில்லை - மத்திய அரசு பதிலால் ஷாக்!


டெல்லி : உக்ரைனில் இருந்து போர் காரணமாக நாடு திரும்பிய மாணவர்கள் இந்திய கல்லூரிகளில் படிப்பைத் தொடர முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உக்ரைனில் கல்வி கற்று வந்த இந்திய மாணவர்கள் அங்கு போர் மூண்டதன் காரணமாக படிக்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டனர். அவர்கள் பெரும் முயற்சிகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.

உக்ரைனில் பயிலும் இந்திய மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை இந்திய கல்வி நிறுவனங்களில் சேர்த்துக்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது.

 

உக்ரைன் மாணவர்கள்

இந்தியாவில் இருந்து 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் உக்ரைன் நாட்டில் தங்கியிருந்து படித்து வந்தார்கள். உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக அந்த மாணவர்கள் இந்தியா திரும்பினர். போர் காரணமாக நாடு திரும்பிய மாணவர்களுக்கு இந்தியாவில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் படிப்பைத் தொடர அனுமதிக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 

நாடு திரும்பிய மாணவர்கள்

கொரோனா தொற்று காரணமாக சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும், போர் காரணமாக உக்ரைனில் இருந்தும் நாடு திரும்பிய இந்திய மாணவர்களை இந்திய கல்லூரிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு மாநில அரசுகள் கோரிக்கை விடுத்து வந்தன. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எம்.பிகளும் நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக கோரிக்கை வைத்துள்ளனர்.

 

அமைச்சர் பதில்

இந்த கோரிக்கைகள் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அவரது பதிலில், உக்ரைனில் இருந்து வந்த மாணவர்கள் இந்திய கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் தங்கள் படிப்பைத் தொடர விதிகளில் இடமில்லை. உக்ரைன் மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்து இங்கு வரும் மாணவர்கள் இந்தியாவில் சேர முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

 

விதிகளில் இடம் இல்லை

மேலும், இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டம் 1956 மற்றும் தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் 2019ன் விதிமுறைகளில் எந்தவொரு வெளிநாட்டு மருத்துவ நிறுவனங்களிலிருந்தும் மருத்துவ மாணவர்களை இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு மாற்றுவதற்கான விதிகள் எதுவும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

நடவடிக்கை

மேலும், இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவ பல்கலைக் கழகங்களில், வெளிநாடுகளில் இருந்து வந்த மாணவர்களை சேர்ப்பதற்கு தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் அளிக்கவில்லை. அதே நேரத்தில் மற்ற வெளிநாட்டு கல்லூரிகளில் அவர்கள் படிப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும், அதற்கான முயற்சிகளை இந்திய வெளியுறவு அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் போர்.. இனிமேல் தான் இந்தியாவுக்கு ஆபத்து

 

மாணவர்கள் அதிர்ச்சி

உக்ரைன் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து படிப்பைத் தொடர முடியாமல் திரும்பிய மாணவர்கள், மத்திய அரசு தங்களுக்கு சாதகமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என நம்பி இருந்த நிலையில், மத்திய இணையமைச்சரின் இந்த பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

​​​​​​​

Comments

Popular posts from this blog

CSK: ‘தோனிக்கு அடுத்து’…புது கேப்டன் யார்? ஜடேஜா இல்லையாம்..ரேசில் 2 பேர்..வெளிநாட்டு வீரருக்கு வாய்ப்பு?