வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்: புதிய சலுகைகளுக்காக காத்திருக்கும் தமிழக விவசாயிகள்..


வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்: புதிய சலுகைகளுக்காக காத்திருக்கும் தமிழக விவசாயிகள்..


சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெடை தாக்கல் செய்கிறார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்.

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஓ.பன்னீர்செல்வம் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்த பிறகு இடைக்கால நிதி நிலை அறிக்கை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடப்பு ஆண்டுக்கான 2022-23 முழுமையான நிதி நிலை அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில், அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து உயர் கல்வியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில், சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.

இதையும் படிங்க: பிறந்த குழந்தையை சாக்கடையில் வீசி சென்ற பெண்.. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்..

முன்னதாக, வேளாண் பட்ஜெட் குறித்து மாநில அளவிலான விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆலோசனை கூட்டம் நடத்தி அவர்களின் கருத்துகளையும் பெற்றுள்ளார். அதேபோல், வேளாண் நிதி நிலை அறிக்கை தொடர்பாக 250க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் நேரடியாக கருத்து கேட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

மேலும், விவசாயிகளின் எதிர்பார்ப்புக்கு பட்ஜெட்டில் விடை கிடைக்கும் என்றும் இயற்கை விவசாயத்திற்கான திட்டங்கள் தமிழக வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறும் என்றும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உறுதி அளித்திருந்தார்.

அதன்படி, வேளாண் பட்ஜெட்டில் பல புதிய சலுகைகளும், அறிவிப்புகளும் வரும் என்ற நம்பிக்கையுடன் தமிழக விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் இன்று முதல் தனியார் பால் விலை ரூ.4 உயருகிறது!2140040864

People living in quot different world quot as a result of pandemic says health chief #World