தாயை கொலை செய்த 17 வயது சிறுமி!
தாயை கொலை செய்த 17 வயது சிறுமி! தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் முனியலட்சுமி என்பவர் வசித்து வந்தார். துய்மை பணியாளராக பணியாற்றி வந்த இவர், கணவரை பிரிந்து தனது 17 வயது மகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் முனியலட்சுமியின் மகள் அப்பகுதியில் உள்ள ஆண் நண்பர்களுடன் பழகி வந்ததை, தாயார் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தாயை கொலை செய்ய முடிவு செய்த சிறுமி தனது ஆண் நண்பர்களுடன் சேர்ந்து, வீட்டில் தூங்கி கொண்டிருந்த தனது தாயை கடுமையாகத் தாக்கி, பின்னர் கழுத்தை நெறித்து கொலை செய்தாக கூறப்படுகிறது. இதையடுத்து, தனது தாயை யாரோ கொலை செய்து விட்டதாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். பின் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், தம்மை பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தியதால், தனது தாயை கொன்றதாக சிறுமி, தெரிவித்தார். இதையடுத்து சிறுமி மற்றும் அவரது ஆண் நண்பர்கள் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.