த்ரிஷா குறித்த வதந்திக்கு அவரது தாயார் முற்றுப்புள்ளி!!1955078465
த்ரிஷா குறித்த வதந்திக்கு அவரது தாயார் முற்றுப்புள்ளி!!
த்ரிஷா அரசியலில் நுழைவது குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் அவரது தாயார் உமா கிருஷ்ணன்.
நடிகை த்ரிஷா கிருஷ்ணன் 20 ஆண்டுகளாக முன்னணி நாயகியாக ஒரு நிலையான திரை வாழ்க்கையைக் கொண்டிருக்கிறார். சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் ஆகியோர் நடிப்பில், மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தில் குந்தவை என்ற முக்கிய கதாபாத்திரத்தில் தற்போது அவர் நடித்து வருகிறார்.
கடந்த சில வாரங்களாக த்ரிஷா அரசியல் கட்சி ஒன்றில் இணைந்து அரசியல்வாதியாக பொது வாழ்வில் நுழையப் போவதாக இணையத்தில் செய்திகள் வெளியாக ஆரம்பித்தன. அவரின் நண்பரான தளபதி விஜய் அவரை அரசியலில் நுழைவதற்கு ஊக்குவித்ததாகவும் சில தகவல்கள் கூறின.
தற்போது த்ரிஷாவின் தாயார் உமா கிருஷ்ணன், தனது மகள் அரசியலுக்கு வருவார் என்ற வதந்தியை மறுத்துள்ளார். த்ரிஷா தனது நடிப்பில் பிஸியாக இருப்பதாகவும், விரைவில் அனைத்து இந்திய மொழிகளிலும் இன்னும் பல படங்களில் கமிட்டாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். எவர்கிரீன் நடிகை எந்த நேரத்திலும் தனது கரியரை மாற்ற மாட்டார் என்பதையும் உறுதி பட தெரிவித்து ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் உமா கிருஷ்ணன்.
இதற்கிடையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் தளபதி 67 படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கவிருப்பதாக இணையத்தில் சலசலப்பு நிலவுகிறது. இந்தப் படம் தற்போது முன் தயாரிப்பில் உள்ளது. இதையடுத்து இந்த ஆண்டின் பிற்பகுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
Post a Comment