இன்று அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும் பொது விடுமுறை!1897831491
இன்று அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும் பொது விடுமுறை!
இன்று புதுச்சேரி முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும் பொது விடுமுறையை அறிவித்துள்ளது. இன்றைய தினம் ஆகஸ்ட் 16ம் தேதி, சட்டபூர்வ பரிமாற்ற தினமாக புதுச்சேரியில் கடைப்பிடிக்கப்படுகிறது.
நேற்று நமது நாட்டின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியேற்றி உரையாற்றினார். டெல்லியில் பிரதமர் சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியேற்றுவது இது 9-வது முறையாகும்.. பொதுவாக பிரதமர் மோடி உள்நாடு, வெளிநாடு என எங்கு உரை நிகழ்த்தினாலும் டெலி ப்ராம்ப்டர் மூலம் உரை நிகழ்த்துவது வழக்கம். டெலி ப்ராம்ப்டர் இல்லாமல் அவரால் உரை நிகழ்த்த முடியுமா என்று காங்கிரஸ் பலமுறை விமர்சனம் செய்ததும் உண்டு. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று 82 நிமிடங்கள் சுதந்திர தின உரையை ஆற்றினார். இந்த உரையின் போது பிரதமர் மோடி டெலி ப்ராம்ப்டரை தவிர்த்து உரையாற்றினார்.
இதே போல் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கொடியேற்றி வைத்து அணிவக்குப்பு மரியாதையை ஏற்று கொண்டார். இதனை தொடர்ந்து பல்வேறு துறைகளில் சாதனை படைத்த ஆன்றோர்களுக்கு சிறப்பு பரிசுகள், பதக்கங்கள் வழங்கப்படது. பின்னர் பள்ளி மாணவர்களின் கண்கவர் நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் அனைத்து அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரி மாநிலம் கடந்த 1962ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி இந்தியாவுடன் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டது. இந்த தினத்தை சட்ட பூர்வ பரிமாற்ற தினமாக புதுச்சேரி அரசு சார்பில் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சட்டபூர்வ பரிமாற்ற தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி மாநிலத்தில் ஆகஸ்ட் 16ம் தேதி அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும் அரசு பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment