வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்: புதிய சலுகைகளுக்காக காத்திருக்கும் தமிழக விவசாயிகள்.. சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெடை தாக்கல் செய்கிறார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஓ.பன்னீர்செல்வம் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்த பிறகு இடைக்கால நிதி நிலை அறிக்கை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடப்பு ஆண்டுக்கான 2022-23 முழுமையான நிதி நிலை அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில், அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து உயர் கல்வியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். இதையும் படிங்க: பிறந்த குழந்தையை சாக்கடையில் வீசி சென்ற பெண்.. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்.. முன்னதாக, வேளாண் பட்ஜெட் குறித்து மாநில அளவிலான விவசா...
உக்ரைன் மாணவர்கள் இந்திய கல்லூரிகளில் சேர முடியாது! விதிகளில் இடமில்லை - மத்திய அரசு பதிலால் ஷாக்! டெல்லி : உக்ரைனில் இருந்து போர் காரணமாக நாடு திரும்பிய மாணவர்கள் இந்திய கல்லூரிகளில் படிப்பைத் தொடர முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. உக்ரைனில் கல்வி கற்று வந்த இந்திய மாணவர்கள் அங்கு போர் மூண்டதன் காரணமாக படிக்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டனர். அவர்கள் பெரும் முயற்சிகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். உக்ரைனில் பயிலும் இந்திய மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை இந்திய கல்வி நிறுவனங்களில் சேர்த்துக்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது. உக்ரைன் மாணவர்கள் இந்தியாவில் இருந்து 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் உக்ரைன் நாட்டில் தங்கியிருந்து படித்து வந்தார்கள். உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக அந்த மாணவர்கள் இந்தியா திரும்பினர். போர் காரணமாக நாடு திரும்பிய மாணவர்களுக்கு இந்தியாவில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் படிப்பைத் தொடர அனுமதிக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். நாடு திரும்பிய மாணவர்கள் கொரோனா தொற்று காரணமாக...
தமிழகத்தில் இன்று முதல் தனியார் பால் விலை ரூ.4 உயருகிறது! சென்னை, தமிழகத்தில் தினமும் சுமார் 2¼ கோடி லிட்டர் பால் உற்பத்தி நடைபெறுகிறது. இதில் அரசு நிறுவனமான 'ஆவின்' மூலமாக 38.26 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. மீதமுள்ள பாலை தமிழகம் மற்றும் ஆந்திராவை சேர்ந்த தனியார் நிறுவனங்களே கொள்முதல் செய்கின்றன. தனியார் பால் நிறுவனங்கள் அவ்வப்போது விலையை உயர்த்துவது வழக்கம். 2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்குக்கு முன்பு தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.6 அதிரடியாக உயர்த்தப்பட்டது. தினசரி பால் உற்பத்தியில் பெரும்பங்கு வகிப்பதாலும், டீக்கடைகள் முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை தனியார் பாலையே உபயோகிப்பதால் தனியார் பால் உற்பத்தியாளர்கள் தன்னிச்சையாக விலையை உயர்த்துவதை வாடிக்கையாக கொண்டிருப்பதாக பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச்சங்கத்தினர், பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர். லிட்டருக்கு ரூ.4 உயர்வு இந்த ஆண்டு தொடக்கத்தில் அதாவது ஜனவரி மாதம் ஒரு முறையும், மே மாதம் ஒரு முறையும் தனியார் பால் விலை உயர்த்தப்பட்டிருந்தது. இந்தநிலையில் 3-வது முறையாக தனியார் பால் விலை உயர்த்தப்படுகிறது...
Comments
Post a Comment