தங்கம் விலை குறைவு!
தங்கம் விலை குறைவு!
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 65 குறைந்து ஒரு கிராம் ரூ. 5,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ஒரு சவரன் ரூ. 43,520 விற்பனை செய்யப்படுகிறது. மேலும், சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.1.40 குறைந்து ரூ. 76.40க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சா்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக தங்கம் விலை நாளுக்கு நாள் உயா்ந்து வருகிறது. இந்நிலையில், மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதன் எதிரொலியாக தங்கத்தின் விலையில் பெரும் ஏற்றம் காணப்பட்டது.
மத்திய பட்ஜெட்டில் இறக்குமதி வரி அதிகரிப்பு குறித்த அறிவிப்பு வெளியானது. இதனால், தங்கம் விலை இதுவரை இல்லாத அளவுக்கு விலை அதிகரித்து.
விலையில் புதிய உச்சம்:
வியாழக்கிழமை காலை முதலே தங்கத்தின் விலை மேலும் அதிகரித்தது. ஒரே நாளில் பவுனுக்கு ரூ. 720 வரை உயா்ந்து மாலை நிலவரப்படி ரூ. 44,040-க்கு விற்பனையானது. கடந்த புதன்கிழமை ரூ.5,415 ஆக இருந்த ஒரு கிராம் தங்கம் வியாழக்கிழமை ரூ.5,505 ஆக அதிகரித்து காணப்பட்டது.
கடந்த புதன்கிழமை ரூ.76 ஆக இருந்த ஒரு கிராம் வெள்ளி, வியாழக்கிழமை ரூ.1.80 அதிகரித்து ரூ.77.80 ஆக இருந்தது.
Comments
Post a Comment