அரசு பள்ளி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி..!2104408118


அரசு பள்ளி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி..!


சேலம் அருகே பள்ளி மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற மாணவி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருகிறார். மாவட்ட கலெக்டர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

சேலம்:

சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி. இவர் மேச்சேரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார். இவரது தந்தை இறந்துவிட்ட நிலையில் பெரியப்பா பள்ளியில் சென்று விட்டு வருவது வழக்கம். அதன்படி இன்று காலையில் அவரது பெரியப்பா மாணவியை பள்ளிக்கு சென்று அழைத்து விட்டு வந்தார்.

பள்ளியில் பிரேயருக்கு செல்லாமல் அமர்ந்திருந்த மாணவி திடீரென பள்ளி மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மாணவியை கலெக்டர் கார்மேகம் சென்று உடனடியாக விசாரணை நடத்தினார்.

கலெக்டர் கார்மேகம் நிருபர்களிடம் கூறியதாவது, "மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட தொடர்பாக பள்ளியில் ஆசிரியருக்கும், மாணவிக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. குடும்ப பிரச்சினைகளால் அவர் தற்கொலைக்கு முயன்று உள்ளார். மேலும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு கவுன்சிலிங் கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது." இவ்வாறு அவர் கூறினார்.

Comments

Popular posts from this blog

வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்: புதிய சலுகைகளுக்காக காத்திருக்கும் தமிழக விவசாயிகள்..

உக்ரைன் மாணவர்கள் இந்திய கல்லூரிகளில் சேர முடியாது! விதிகளில் இடமில்லை - மத்திய அரசு பதிலால் ஷாக்! 1939500339

தமிழகத்தில் இன்று முதல் தனியார் பால் விலை ரூ.4 உயருகிறது!2140040864