கவர்னர் முதல்வர்க்கு கொரோனா அதிரச்சியில் மக்கள்515448617


கவர்னர் முதல்வர்க்கு கொரோனா அதிரச்சியில் மக்கள்


மும்பை : மகாராஷ்டிர கவர்னர் பகத் சிங் கோஷ்யாரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கூட்டணி ஆட்சி கவிழும் நிலையில் உள்ளது. இந்நிலையில், அமைச்சரவை கூட்டம் நடைபெறுவதற்கு சற்று முன்னதாக உத்தவ் தாக்கரேவுக்கு கொரோனா பாதிப்புக்குள்ளானதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல் நாத் தெரிவித்துள்ளார். 

 

இது தொடர்பாக கமல்நாத் கூறுகையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட உத்தவ் தாக்கரேவை சந்தித்து பேச முடியவில்லை. அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன் என்றார்.

சிவசேனா எம்.எல்.ஏக்கள் 40 பேர் உத்தவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில் மகாராஷ்டிர சட்டப்பேரவை கலைக்கப்படலாம் என தகவல்களும் வெளியாகி வருகிறது. இந்நிலையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது

Comments

Popular posts from this blog

CSK: ‘தோனிக்கு அடுத்து’…புது கேப்டன் யார்? ஜடேஜா இல்லையாம்..ரேசில் 2 பேர்..வெளிநாட்டு வீரருக்கு வாய்ப்பு?