Rohit Sharma: ‘CEO ஆஃப் ஊமகுத்து’…ஆர்சிபி பிளே ஆஃப் வாய்ப்பை..ஒரேயொரு பேட்டியால் காலி செய்த ரோஹித்?
Rohit Sharma: ‘CEO ஆஃப் ஊமகுத்து’…ஆர்சிபி பிளே ஆஃப் வாய்ப்பை..ஒரேயொரு பேட்டியால் காலி செய்த ரோஹித்?
ஆர்சிபி:
இதுவரை கோப்பையே வெல்லாமல் இருந்து வரும் ஆர்சிபி அணி, இந்த சீசனில் 13 போட்டிகளில் 7 வெற்றிகளை பெற்று, -0.323 நெட் ரன்ரேட்டுடன் 5ஆவது இடத்தில் நீடித்து வருகிறது. இந்த அணி பிளே ஆஃப் செல்வதற்கு வாய்ப்பு மிக மிக குறைவாக இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் மனது வைத்தால் மட்டுமே பிளே ஆஃப் செல்ல முடியும்.
முதல் 2 அணிகள்:
தற்போதுவரை குஜராத் டைடன்ஸ் அணி மட்டுமே 20 புள்ளிகளுடன் பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்திருக்கிறது. அடுத்து 2ஆவது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் அணி கடைசிப் போட்டியில் சிஎஸ்கேவுடன் விளையாட உள்ளது. இதில் ராஜஸ்தான் மெகா தோல்வியை சந்தித்தால் மட்டுமே, பிளே ஆஃப் சுற்றிலிருந்து வெளியேற்றப்படும் என்பதால், ராஜஸ்தானுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாகத்தான் இருக்கிறது.
மூன்றாவது அணி:
மூன்றாவது இடத்தில் இருக்கும் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. இதில் லக்னோ அணி இன்று வெற்றிபெற்றால் பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்துவிடும். இந்த லக்னோ அணியும் மெகா தோல்வியை சந்தித்தால் மட்டுமே, பிளே சுற்றிலிருந்து வெளியேற்றப்படும்.
நான்காவது அணி:
நான்காவதாக பிளே ஆஃப் செல்லப் போவது யார் என்பதை தீர்மானிக்கும் இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி இருக்கிறது. இந்த மும்பை அணி கடைசிப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. இதில் மும்பை ஜெயித்து, ஆர்சிபி குஜராத் டைடன்ஸ் அணியை வீழ்த்தினால் மட்டுமே ஆர்சிபிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு இருக்கும்.
ஒருவேளை மும்பையை டெல்லி வீழ்த்திவிட்டால், ஆர்சிபி பிளே ஆஃப் வாய்ப்பு முடிவுக்கு வந்துவிடும். டெல்லி அணி 16 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சென்றுவிடும்.
ரோஹித் பேட்டி:
இந்நிலையில் 13ஆவது போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக தோற்றப் பிறகு பேசிய மும்பை இந்தியன்ஸ் அணிக் கேப்டன் ரோஹித் ஷர்மா, ‘‘எதிர்காலத்தை கருத்தில்கொண்டு அடுத்த போட்டியிலும் சில அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்’’ எனக் கூறியுள்ளார். இதன்மூலம், டெல்லி அணிக்கு வெற்றி வாய்பு பிரகாசமாக இருக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள். இது நடந்தால், ஆர்சிபியின் பிளே ஆஃப் வாய்ப்பு முடிவுக்கு வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment