IPL 2022: ரோஹித், ஜடேஜாவை பின்னுக்கு தள்ளி…‘கிண்டல் நாயகன்’ முதலிடம்…செம்ம ரெக்கார்ட்!


IPL 2022: ரோஹித், ஜடேஜாவை பின்னுக்கு தள்ளி…‘கிண்டல் நாயகன்’ முதலிடம்…செம்ம ரெக்கார்ட்!


ஐபிஎல் 15ஆவது சீசன் 68ஆவது லீக் போட்டியில்சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து 150 ரன்களை சேர்த்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19.4 ஓவர்கள் முடிவில் 151/5 ரன்கள் சேர்த்து, 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

பராக் அபாரம்:

இப்போட்டியில் சிஎஸ்கேவின் ஸ்கோர் வேகத்திற்கு முட்டுக்கட்டை போட்டவர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ரியான் பராக்தான் முதன்மையானவராக இருக்கிறார். ஜகதீசன் (1), மொயின் அலி (93) இருவரையும் கேட்ச் பிடித்ததால்தான் சிஎஸ்கேவால் பெரிய ஸ்கோர் அடிக்க முடியவில்லை.

கடும் விமர்சனங்கள்:

ரியான் பராக் சமீப காலமாகவே பெரும் சர்ச்சையில் சிக்கி வருகிறார். இவர் கேட்ச் பிடித்த உடன் பந்தை, தரைவரை கொண்டு சென்று பந்து தரையில் தொடவில்லை என்பதை காண்பிப்பார். நடுவர்களின் மோசனமான முடிவுகளை விமர்சிக்கும் விதமாக இது இருப்பதாக கூறி, பராக்கை ‘கிண்டல் நாயகன்’ என அழைத்து வந்தனர். இதற்கு முன்னாள் வீரர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வந்தார்கள்.

மெகா சாதனை:

இந்நிலையில் ரியான் பராக், இந்த விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு மெகா சாதனையை படைத்துள்ளார். ஆம், ஒரு சீசனில் அதிக கேட்ச்களை பிடித்த வீரராக பராக் சாதனை படைத்துள்ளார். இதுவரை பராக் பிடித்துள்ளது 15 கேட்ச்கள். இதற்குமுன் ஜடேஜா, ரோஹித் ஷர்மா ஆகியோர் பிடித்திருந்த 13 கேட்ச்கள்தான் சாதனையாக இருந்தது.

Comments

Popular posts from this blog

அண்ணா பல்கலை.யில் வகுப்பறைகளுக்கு நேரில் சென்று மாணவர்களை சந்தித்த பிரதமர் மோடி!632967223