CSK: ‘தோனிக்கு அடுத்து’…புது கேப்டன் யார்? ஜடேஜா இல்லையாம்..ரேசில் 2 பேர்..வெளிநாட்டு வீரருக்கு வாய்ப்பு?
CSK: ‘தோனிக்கு அடுத்து’…புது கேப்டன் யார்? ஜடேஜா இல்லையாம்..ரேசில் 2 பேர்..வெளிநாட்டு வீரருக்கு வாய்ப்பு?
இந்த சீசன் துவங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு, சிஎஸ்கே கேப்டன் பதவியை ஏற்றுக்கொண்ட ரவீந்திர ஜடேஜா முதல் 8 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுக்கொடுத்தார். அதுமட்டுமல்ல பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலுமே படுமோசமாக சொதப்பி பார்ம் அவுட்டிற்கு சென்றார்.
ஜடேஜா விலகல்:
ஜடேஜா தொடர்ந்து கேப்டன் பதவியில் நீடித்தால், அவரது நிலைமை இன்னும் மோசமாகும் எனக் கருதப்பட்ட நிலையில் அவர் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். மீண்டும் தோனி வசம் கேப்டன் பதவி சென்றது. தோனி தலைமையில் சிஎஸ்கே முதல் 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்று அசத்தியது. அந்த ஒரு தோல்வி கூட 12 ரன்கள் வித்தியாசத்தில்தான். இதனைத் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக சிஎஸ்கே படுமோசமாக தோற்றது.
ஜடேஜா திட்டவட்டம்:
ஜடேஜா இதற்குமுன் கேப்டன்ஸி அனுபவம் இல்லாமல் இருந்ததால், சிஎஸ்கேவை வழிநடத்தியபோது அழுத்தங்கள் காரணமாக பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் படுமோசமாக சோதப்பினார். இதனால், நிர்வாகம் அதிருப்தியடைந்து ஜடேஜாவை கேப்டன் பதவியிலிருந்து நீக்கியதாக கூறப்படுகிறது. கேப்டன் பதவியிலிருந்து நீக்கியதால் நிர்வாகத்திற்கும், ஜடேஜாவுக்கும் இடையில் வார்த்தைபோல் நடந்ததாகவும், இதனால்தான், ஜடேஜா காயத்தை காரணம் காட்டி அணியிலிருந்தே விலகியதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
இதனால், அடுத்த சீசனில் ஜடேஜா சிஎஸ்கேவுக்கு விளையாடுவது சந்தேகம்தான் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
புது கேப்டன்:
இந்நிலையில் புதுக் கேப்டனை தேடும் பணியில் சிஎஸ்கே ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர்களது முதன்மை தேர்வாக பென் ஸ்டோக்ஸ் இருப்பதாகவும், இவருக்கு 12 கோடி சம்பளமாக கொடுப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஒருவேளை மினி ஏலத்தில் இவரை வாங்க முடியவில்லை என்றால், ருதுராஜ் கெய்க்வாட்தான் அடுத்த கேப்டனாக இருப்பார் எனவும் சிஎஸ்கே வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது.
Comments
Post a Comment