வெளியானது விக்ரம் படத்தின் மிரட்டலான டிரைலர்.. கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் வெறித்தனம்!


வெளியானது விக்ரம் படத்தின் மிரட்டலான டிரைலர்.. கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் வெறித்தனம்!


இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி உள்ள விக்ரம் படத்தின் மிரட்டலான டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி மே 15ம் தேதியான இன்று நடைபெற்றது.

விக்ரம் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் அறிவிப்புக்கே ஆரம்பிக்கலாமா என கறி விருந்து போட்டு பலரை போட்டுத் தள்ளுவது போல மிரட்டலாக ஆரம்பித்து வைத்த கமல் விக்ரம் படத்தின் டிரைலரில் அதை விட பல மடங்கு தனது இன்டென்ஸ் ஆன நடிப்பால் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் பவானி எனும் வில்லன் கதாபாத்திரத்தில் சிறுவர் சீர்த்திருத்த பள்ளி மாணவர்களை கொண்டு கிரைம்களை செய்யும் கேங்ஸ்டராக நடித்திருப்பார். இந்த படத்தில் ஜெயில் கைதியாக தனது வித்தியாசமான வில்லத்தனத்தை வெளிப்படுத்தி உள்ளார் விஜய்சேதுபதி.

மலையாள திரையுலகின் நடிப்பு ஜாம்பாவனான பகத் ஃபாசிலும் தனது போர்ஷனை பக்காவாக செய்து ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளார். அனிருத் இசையில் தெறிக்கும் பின்னண் இசையில் விக்ரம் படத்தின் டிரைலர் தாறுமாறாக தற்போது வெளியாகி உள்ளது.

Comments

Popular posts from this blog

CSK: ‘தோனிக்கு அடுத்து’…புது கேப்டன் யார்? ஜடேஜா இல்லையாம்..ரேசில் 2 பேர்..வெளிநாட்டு வீரருக்கு வாய்ப்பு?