ரேபிட் செஸ் போட்டி: விஸ்வநாதன் ஆனந்த் முதலிடம் பிடித்து அசத்தல்


ரேபிட் செஸ் போட்டி: விஸ்வநாதன் ஆனந்த் முதலிடம் பிடித்து அசத்தல்


போலாந்தில் நடைபெற்றுவரும் ரேபிட் செஸ் போட்டியில் தமிழகத்தை சேந்த விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

ரேபிட் மற்றும் பிளிட்ஷ் செஸ் போட்டி 2022  போலந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்று ரவுண்ட் ராபின் (ஒரு வீரர் மற்ற வீரர்களிடம் ஒரு முறை மோதவேண்டும் இறுதியில் அதிக புள்ளிகளை பெறும் வீரர் சாம்பியன் ஆவார்) முறையில் விளையாடி வருகின்றனர்.

ஒன்பது சுற்றுகளின் முடிவில் ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த் ரேபிட் செஸ் போட்டியில் முதலிடம் பிடித்துள்ளார். ஆறு வெற்றி, இரண்டு டிரா, ஒரு தோல்வி என 14 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சாதனை நிகழ்த்தியுள்ளார்.

13 புள்ளிகளுடன் ஹங்கேரி கிராண்ட் மாஸ்டர் ரிச்சேர்ட் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இன்று பிளிட்ஷ் செஸ் போட்டி தொடங்குகிறது. இதிலும் ஆனந்த் ஜொலிக்கும் பட்சத்தில் நடப்பாண்டு ரேபிட் மற்றும் பிளிட்ஷ் செஸ் நாயகனாக ஆனந்த் மகுடம் சூடவுள்ளார்.

Comments

Popular posts from this blog

அண்ணா பல்கலை.யில் வகுப்பறைகளுக்கு நேரில் சென்று மாணவர்களை சந்தித்த பிரதமர் மோடி!632967223