கோவிட் இல்லை என்றாலும் கட்டாய தனிமை - அரசிடம் சிக்கி தவிக்கும் சீன மக்கள்


கோவிட் இல்லை என்றாலும் கட்டாய தனிமை - அரசிடம் சிக்கி தவிக்கும் சீன மக்கள்


சீனாவின் பெய்ஜிங் நகரில் கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டுவந்த நபர்களையும் ஹோட்டல்களில் கட்டாயம் தனிமையில் இருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளதால் மக்கள் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். உலகிலேயே முதல் முதலில் கோவிட் பாதிப்பு சீனாவின் வூஹான் பகுதியில் கண்டறியப்பட்ட நிலையில், அந்நாடு பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து சில மாதங்களிலேயே பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவந்தது. 2020ஆம் ஆண்டு இறுதியிலும், 2021ஆம் ஆண்டுகளிலும் அந்நாட்டில் கோவிட் பெருந்தொற்று பாதிப்பு பரவல் இல்லாத நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் அங்கு ஒமிக்ரான் தொற்று பரவல் வேகமாகமெடுத்தது.

அந்நாட்டின் வர்த்தக தலைநகரான ஷாங்காய் மாகாணத்தில் தொற்று பாதிப்பு அதிகம் காணப்பட்டதால், மாகாணம் முழுவதும் உள்ள 2.5 கோடி மக்கள் வாரக் கணக்கில் லாக்டவுனில் இருந்தனர். இதன் காரணமாக அத்தியாவசிய பொருள்கள் கிடைக்காமல் பொது மக்கள் தவித்த நிலையில், நாட்டின் பொருளாதாரம் பெரும் தேக்க நிலை கண்டது. இந்நிலையில், ஷாங்காயில் பரவல் குறைந்ததைத் தொடர்ந்து சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் அங்கு ஏப்ரல் 23ஆம் தேதி முதல் லாக்டவுன் அறிவிக்கப்பட்டது.

பெய்ஜிங்கில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு சுமார் மாத காலம் நிறைவு பெறவுள்ள நிலையில், பெருந்தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.அங்கு புதிதாக 26 பேருக்கு தொற்று ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், பெய்ஜிங் பகுதி மக்களுக்கு சோதனைக் காலம் இன்னும் நிறைவடையவில்லை. கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டாலும் அந்நாட்டு மக்களை ஹோட்டலில் கட்டாயம் தனிமையில் இருக்க வேண்டும் என சீன அரசு உத்தரவு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. கோவிட் பாதிப்பு முற்றிலும் ஓய்ந்து பூஜ்ஜியம் ஆகும் வரை அந்நாட்டு அரசு கட்டுப்பாடுகளை விடாமல் பின்பற்றும் வழக்கத்தை கொண்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இதையும் படிங்க: வடகொரியாவில் அதிகரிக்கும் கொரோனா... ஆச்சரியமும், அச்சத்தையும் ஏற்படுத்தும் பராம்பரிய சிகிச்சை முறைகள் 

இந்த கட்டுப்பாட்டின் படி, 13 ஆயிரம் மக்கள் கோவிட் பாதிப்பு இல்லை என்றாலும் ஹோட்டலில் கட்டாயத் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். இதை மீறுபவர்களுக்கு முதலில் நீர் விநியோகம், மின்சார விநியோகம் நிறுத்தப்படும். பின்னர் அவர்களின் வீட்டு சாவி பறிக்கப்பட்டு, சுகாதாரத்துறை அலுவலர்கள் கட்டுப்பாடுகளை அமல்படுத்துவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

CSK: ‘தோனிக்கு அடுத்து’…புது கேப்டன் யார்? ஜடேஜா இல்லையாம்..ரேசில் 2 பேர்..வெளிநாட்டு வீரருக்கு வாய்ப்பு?