நிறுத்தி வைக்கப்பட்ட சிம்பு படத்தின் சூட்டிங்.... இன்னும் சில தினங்களில் துவங்க இருக்காம்!


நிறுத்தி வைக்கப்பட்ட சிம்பு படத்தின் சூட்டிங்.... இன்னும் சில தினங்களில் துவங்க இருக்காம்!


நடிகர் சிம்பு அடுத்தடுத்த சிறப்பான கதைத்தேர்வை மேற்கொண்டு வருகிறார். கமர்சியல், மசாலா படங்களில் நடித்து அதிகமான அலப்பறையுடன் படங்களை கொடுத்து வந்த அவரது செயல்பாடுகளில் சமீபத்தில் முதிர்ச்சி காணப்படுகிறது. சிறப்பான இயக்குநர்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியானது மாநாடு படம். படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார், கல்யாணி பிரியதர்ஷன் சிம்புவிற்கு ஜோடியாகியிருந்தார். கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்டவர்கள் நடிப்பில் இந்தப் படம் வெளியானது. ரசிகர்களின் சிறப்பான ஆதரவுடன் இந்தப் படம் 100 கோடி ரூபாய் க்ளப்பில் இணைந்தது.

டைம் லூப் பாணியிலான இந்தக் கதையை சாதாரண ரசிகர்களுக்கும் புரியும் வகையில் சிறப்பாக எடுத்திருந்தார் வெங்கட் பிரபு. படத்தில் எஸ்ஜே சூர்யாவின் நடிப்பும் அனைவரையும் வெகுவாக கவர்ந்து அவருக்கு பாராட்டுக்களையும் பட வாய்ப்புகளையும் குவித்து வருகிறது.

இதனிடையே தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து முடித்துள்ளார் சிம்பு. இந்தப் படத்தின் போஸ்டர்கள், கிளிம்ப்ஸ் மற்றும் காலத்துக்கும் நீ வேணும் பாடல் லிரிக் வீடியோ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து படத்திற்கான எதிர்பார்ப்பையும் கூட்டியுள்ளது.

படத்தில் கிராமத்து இளைஞனாகவும் சிம்பு நடித்துள்ளார். பல கெட்டப்புகளை போட்டுள்ளதாக தெரிகிறது. ஒரு சில போஸ்டர்களின் மிகவும் ஒல்லியான சிம்புவை பார்க்க முடிகிறது. படத்தின் ரிலீஸ் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். இந்நிலையில் அடுத்ததாக பத்து தல படத்தின் சூட்டிங்கில் சிம்பு விரைவில் இணையவுள்ளார்.

முப்தி படத்தின் ரீமேக்

கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியான முப்தி படத்தின் ரீமேக்காக இந்தப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் டானாக சிவராஜ்குமார் வலுவான கேரக்டரில் நடித்திருப்பார். படம் மிகச்சிறந்த வரவேற்பையும் வசூலையும் குவித்த நிலையில் தற்போது தமிழில் சிம்பு நடிப்பில் இந்தப் படத்தை ஒபேலி கிருஷ்ணா இயக்கி வருகிறார்.

படத்தில் எம்ஜிஆர் என்ற கேரக்டரில் சிம்பு நடித்து வருகிறார். இதற்காக உடல் எடையை மீண்டும் கூட்டி, சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிற்கு மாறியுள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங் மீண்டும் வரும் 27ம் தேதி துவங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான ஏற்பாடுகளை படக்குழு தற்போது மேற்கொண்டு வருகிறது.

ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். முன்னதாக சிம்பு, ஹன்சிகாவுடன் நடித்துள்ள மஹா படமும் ரிலீசாகவுள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Comments

Popular posts from this blog

அண்ணா பல்கலை.யில் வகுப்பறைகளுக்கு நேரில் சென்று மாணவர்களை சந்தித்த பிரதமர் மோடி!632967223