மாநாடு படத்தின் மொத்த வசூல் இது தான்... ரசிகர்களிடம் ஓப்பனாக சொன்ன தயாரிப்பாளர்1703058346
மாநாடு படத்தின் மொத்த வசூல் இது தான்... ரசிகர்களிடம் ஓப்பனாக சொன்ன தயாரிப்பாளர்
சுமார் 40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட மாநாடு படம் பலமுறை தள்ளி வைக்கப்பட்டு, கடைசியாக கடந்த ஆண்டு நவம்பர் 25 ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டது. முதல் நாளே படம் செம வரவேற்பை பெற்றது. தமிழில் எடுக்கப்பட்டாலும் மொத்தம் 5 மொழிகளில் மாநாடு படம் ரிலீஸ் செய்யப்பட்டது. இதில் சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.
எஸ்.ஜே.சூர்யா பேசும், வந்தான்...சுட்டான்...செத்தான்...ரிப்பீட்டு என்ற டயலாக் செம ஃபேமஸ் ஆனது. முதல் நாளே மாநாடு படம் ரூ.9 கோடிகளை வசூல் செய்தது. முதலில் சில நாட்கள் வசூலை அறிவித்து வந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, பிறகு தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் தனக்கு சரியான கணக்கை ஒப்படைக்காததால் படத்தில் வசூலை தன்னால் அறிவிக்க முடியவில்லை என வேதனையாக ட்வீட் போட்டார். அதற்கு பிறகு வசூலை பற்றி அவர் எந்த தகவலும் சொல்லவில்லை.
முதல் வாரத்திலேயே 50 கோடி வசூலை கடந்த மாநாடு படம், 25வது நாளில் 100 கோடி வசூலை கடந்ததாக அறிவிக்கப்பட்டது. சிம்புவின் முதல் 100 கோடி வசூல் படம் இது தான். பிறகு இந்த ஆண்டின் துவக்கத்தில் மாநாடு 100வது நாள் கொண்டாட்டமும் நடைபெற்றது. ஆனால் வசூல் பற்றிய எந்த தகவலும் கூறப்படவில்லை. அதற்குள் ஓடிடியிலும் மாநாடு படம் ரிலீஸ் செய்யப்பட்டு, வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் நேற்று, மாநாடு படம் 117 கோடிகளை உலகம் முழுக்க வசூல் செய்திருப்பதாக சுரேஷ் காமாட்சி ட்விட்டரில் அறிவித்தார். அதோடு, இந்த ஆண்டின் மெகா பிளாக் பஸ்டர் இது தான். சிலம்பரசன், வெங்கட்பிரபு, எஸ்.ஜே.சூர்யா, யுவன்சங்கர் ராஜா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டோருக்கு எனது நன்றி என குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் சிம்புவை கொண்டாட துவங்கி விட்டனர். அனைத்து டாப் ஸ்டார்களும் 100 கோடி கிளப்பில் இணைந்து விட்டார்கள். அடுத்த இலக்கு 200 கோடி தான் என தெரிவித்துள்ளனர்.
Comments
Post a Comment