பிறந்தநாள் கேக் சாப்பிட்ட 16 வயது சிறுமி பலி... வாயில் நுரை தள்ளி இறந்த சோகம்


பிறந்தநாள் கேக் சாப்பிட்ட 16 வயது சிறுமி பலி... வாயில் நுரை தள்ளி இறந்த சோகம்


ராணிப்பேட்டைமாவட்டம்ஆற்காடுஅடுத்த தாஜ்புரா கன்னிக்கோயில் 3-வது தெருவை சேர்ந்தவர் கவிதா. இவர் கணவர் கார்த்திகேயன் இறந்துவிட்டார். இந்நிலையில், கவிதா மகள் அபிராமியுடன் (16) வசித்து வந்துள்ளார். சிறுமிஅபிராமிஆற்காடு தோப்புகானா பகுதியிலுள்ள அரசு பள்ளியில் 3 ஆண்டுகளுக்கு முன்பு 9-ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். பின்னர் பள்ளி படிப்பை நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அபிராமி கடந்த 18-ஆம் தேதி இரவு பிறந்தநாள் விழாவிற்கு சென்று கேக் சாப்பிட்டு விட்டு இரவு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, தாய் கவிதாவிடம் வயிற்று வலி உள்ளது என அபிராமி தெரிவித்துள்ளார். இதனால் கவிதா சோடா வாங்கிக் கொடுத்துள்ளார்.

சோடாவை குடித்துவிட்டு உறங்கிய அபிராமி நேற்று (19.05.2022) காலை வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தார். இதுபற்றி தகவலறிந்த ஆற்காடு தாலுகா சப் இன்ஸ்பெக்டர் சரவணன், அபிராமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அபிராமிக்கு ஃபுட் பாய்சன் ஆகியதால் இறந்தாரா? என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

எலிக்கு வைத்த பொறி... பெண் எஞ்சினியர் காவு.. எச்சரிக்கை செய்தி..!

கேரளாவில் ஷவர்மா சாப்பிட்டு 16 வயது பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் தமிழகத்தில் கேக் சாப்பிட்ட சிறுமி வயிற்று வலி ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே மிகுந்த சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Comments

Popular posts from this blog

CSK: ‘தோனிக்கு அடுத்து’…புது கேப்டன் யார்? ஜடேஜா இல்லையாம்..ரேசில் 2 பேர்..வெளிநாட்டு வீரருக்கு வாய்ப்பு?