Dhanush:முதலில் ராஷி கன்னா, இப்போ நித்யா மேனன்: தனுஷுக்கு தொடரும் சிக்கல்


Dhanush:முதலில் ராஷி கன்னா, இப்போ நித்யா மேனன்: தனுஷுக்கு தொடரும் சிக்கல்


திருச்சிற்றம்பலம் பட பாடல் வீடியோ கசிவது இது ஒன்றும் முதல் முறை அல்ல.

திருச்சிற்றம்பலம்

பல ஆண்டுகள் கழித்து மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் திருச்சிற்றம்பலம் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. நித்யா மேனன், ராஷி கன்னா, ப்ரியா பவானிசங்கர், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

வீடியோ

திருச்சிற்றம்பலம் படத்தில் வரும் கோவில் திருவிழா பாடல் காட்சி வீடியோ கசிந்துவிட்டது. அந்த வீடியோவில் தனுஷும், நித்யா மேனனும் இருக்கிறார்கள். போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வரும் போது இந்த வீடியோ எப்படி கசிந்தது என்று தனுஷ் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நித்யா மேனன்

தனுஷ், நித்யா மேனன் டான்ஸ் ஆடிய வீடியோ முன்பும் கூட கசிந்தது. திருச்சிற்றம்பலம் படத்திற்காக அவர்கள் ஆடிய வீடியோ கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கசிந்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. திருச்சிற்றம்பலம் படப்பிடிப்பு துவங்கியதில் இருந்தே இந்த கசிவு பிரச்சனை இருக்கிறது.

ராஷி கன்னா

திருச்சிற்றம்பலம் படப்பிடிப்பு துவங்கிய முதல் நாளே ஒரு புகைப்படம் கசிந்தது. அதில் தனுஷும், ராஷி கன்னாவும் இருந்தார்கள். புகைப்படம் கசிந்ததற்கே ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் தான் அடுத்ததாக வீடியோ கசிந்தது. இந்நிலையில் மேலும் ஒரு வீடியோ கசிந்து ரசிகர்களை கோபம் அடைய செய்துள்ளது.

Comments

Popular posts from this blog

CSK: ‘தோனிக்கு அடுத்து’…புது கேப்டன் யார்? ஜடேஜா இல்லையாம்..ரேசில் 2 பேர்..வெளிநாட்டு வீரருக்கு வாய்ப்பு?