மக்களே உஷார் !!தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வெளுக்க போகும் கனமழை… வானிலை மையம் தகவல்..
மக்களே உஷார் !!தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வெளுக்க போகும் கனமழை… வானிலை மையம் தகவல்..
தென் தமிழக கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே தென்தமிழக மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்நிலையில் வருகின்ற 4 நாட்களுக்கு மழை நீட்டிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து தலைநகர் சென்னையை பொருத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 28 கிரி செல்சியஸ் இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் பதிவான மழையினை பார்க்கும் போது ராதாபுரத்தில் 6 செ.மீ. மழையும், திண்டுக்கல், கன்னியாக்குமரி, நிலக்கோட்டை, சுருளக்கோடு, வால்பாறையில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மேலும், மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லையென சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Related Topics:4 நாட்களுக்கு மழை, வானிலை மையம்
Click to comment
Comments
Post a Comment