வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்: புதிய சலுகைகளுக்காக காத்திருக்கும் தமிழக விவசாயிகள்..
வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்: புதிய சலுகைகளுக்காக காத்திருக்கும் தமிழக விவசாயிகள்.. சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெடை தாக்கல் செய்கிறார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஓ.பன்னீர்செல்வம் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்த பிறகு இடைக்கால நிதி நிலை அறிக்கை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடப்பு ஆண்டுக்கான 2022-23 முழுமையான நிதி நிலை அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில், அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து உயர் கல்வியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். இதையும் படிங்க: பிறந்த குழந்தையை சாக்கடையில் வீசி சென்ற பெண்.. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்.. முன்னதாக, வேளாண் பட்ஜெட் குறித்து மாநில அளவிலான விவசா...



Comments
Post a Comment