கல்விச் சுற்றுலா சென்ற பஸ் விபத்து ; 23 மாணவர்கள் காயம்


கல்விச் சுற்றுலா சென்ற பஸ் விபத்து ; 23 மாணவர்கள் காயம்


இதையும் படிங்க

ஆசிரியர்

வலஸ்முல்ல பிரதேசத்தில் கல்விச் சுற்றுலா சென்று திரும்பி கொண்டிருந்த பேரூந்து விபத்துக்குள்ளானதில் 23 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

வலஸ்முல்ல பொலிஸ் பிரிவில் ஹதுகல – ஹிருவத்த பாலத்திற்கருகில் நேற்று வியாழக்கிழமை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கல்வி சுற்றுலாவிற்குச் சென்று திரும்பி கொண்டிருந்த போது சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து பேரூந்து அருகிலுள்ள மண்மேட்டில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன் போது குறித்த பேரூந்தில் 35 பாடசாலை மாணவர்களும் , இரு ஆசிரியர்களும் , 6 பெற்றோரும் இருந்துள்ளனர். விபத்தில் 23 மாணவர்களும் , ஆசிரியர்கள் இருவரும் பெற்றோர் 6 பேருடன் பேரூந்து சாரதியும் காயமடைந்து வலஸ்முல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் போது படுகாயமடைந்த மாணவன் ஒருவனும் , ஆசிரியர் ஒருவரும் , பேரூந்து சாரதியும் மேலதிக சிகிச்சைகளுக்காக கராப்பிட்டி மற்றும் மாத்தறை வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

வலஸ்முல்ல பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

Comments

Popular posts from this blog

CSK: ‘தோனிக்கு அடுத்து’…புது கேப்டன் யார்? ஜடேஜா இல்லையாம்..ரேசில் 2 பேர்..வெளிநாட்டு வீரருக்கு வாய்ப்பு?