மருத்துவர் அலட்சியம்: பெண் பலி!! உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர் மகேந்திர சைனி. இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். சைனியின் மனைவி ராதாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடர் வயிற்று வலி இருந்து வந்தது. எனவே, அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்தால் பிரச்னை குணமாகிவிடும் என மருத்துவர்கள் கூறிய நிலையில், கடந்த நவம்பர் மாதம் 21 ஆம் தேதி அந்த தனியார் மருத்துவமனையில் ராதாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், அறுவை சிகிச்சைக்குப் பின்னரும் ராதாவுக்கு தொடர்ந்து வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதனால் அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனைக்கே திரும்பி சென்று புகாரை கூறினர். ஆனால், அந்த மருத்துவமனையில் முறையான தீர்வு கிடைக்காததால், மற்றொரு தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். அந்த மருத்துவமனையில் சிடி ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் தான் அதிர்ச்சிக்குரிய தகவல் அம்பலமானது. அறுவை சிகிச்சை பெண்ணின் வயிற்றுக்குள் பேண்டேஜ் இருந்துள்ளது செய்யப்பட்ட ஸ்கேனில் இருந்துள்ளது. எனவே, அறுவ...